Kalvimaterial Online Exam photo

Online Test

தேர்வு என்பது மாணவர்கள் தங்கள் கற்றல் அடைவு அறிந்து கொள்ள உதவும்  ஒரு கருவியாகும். தேர்வு மூலம் மாணவர்கள் தாங்கள் பயின்ற பாடங்களில் தங்கள் புரிதல் திறன் அறிந்து கொள்ளவும் மேலும் முன்னேறம் செய்யவும் உதவும் .

 தற்போதைய காலத்தில்  அனைத்து போட்டி தேர்வுகள் மற்றும் கல்வி சார்ந்த தேர்வுகள் இணையம்  வழியாக நடத்தபடுகிறது. மாணவர்கள் தங்களை சோதிக்கவும் ,  பொது தேர்வுக்கு  தங்களை தயார்படுத்தவும் , நாங்கள் அவர்கள்  பாடம் சார்ந்த மற்றும் போட்டி தேர்வுகள் சார்ந்த இணைய வழிதேர்வுகள் இங்கு வழங்குகிறோம் . மாணவர்கள் இதனை பயன்படுத்தி தங்களை நல்ல முறையில் தேர்வுகளுக்கு தயார் செய்து கொள்ளலாம் .

இந்த தேர்வினை மாணவர்கள் வீடிலிருந்தே கைபேசி, மடிகணிணி வழியாக  கலந்து கொள்ளலாம்.

நாங்கள் வழங்கும் தேர்வுகள் விபரம்

1.11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் வாரியான தேர்வுகள்

2.9,10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் வாரியான தேர்வுகள்

3.6-8 வகுப்பு வரை பருவம் வாரியான தேர்வுகள்

4.NMMS போட்டி தேர்வுக்காண  SAT , MAT  தேர்வுகள்

5.TRUST போட்டி தேர்வுக்காண  தேர்வுகள்

6.NTSE போட்டி தேர்வுக்காண  SAT , MAT   தேர்வுகள்

1.இந்த Online Test-இல் கலந்து கொள்வதற்கு நீங்கள் Home Page வரவேண்டும் அங்கு கொடுப்பட்டிருக்கும் “Question Paper” பட்டனை கிளிக் செய்யவும்.

2.கிளிக் செய்தவுடன் அடுத்த பக்கத்திற்கு செல்வீர்கள். அங்கு “start Quiz” பட்டனை கிளிக் செய்யவும்.

3.தற்பொழுது திரையில் கேள்விகள் கேட்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் நான்கு விடைகள் கொடுக்கப்பட்டிருக்கும்.

4.அனைத்து கேள்விகளுக்கும் விடை அளித்தவுடன் இறுதியில் “Finish” பட்டனை கிளிக் செய்யவும்

5.தற்போது திரையில் நீங்கள் எவ்வளவு “Score” எடுத்துள்ளீர்கள் என்று காண்பிக்கப்படும், மற்றும் எத்தனை கேள்விகளுக்கு சரியாக விடை அளித்துள்ளீர்கள் என்று “points” மதிப்பில் காட்டப்படும்.

6.உங்கள் ரிசல்ட் “Rank List” ( Leaderboard) வரவேண்டுமென்றால் அதே பக்கத்தில் காண்பிக்கப்படும் Email மற்றும் Name-இல் Fill செய்துவிட்டு கீழே இருக்கும் “Send” பட்டனை கிளிக் செய்யவும்.

7.நீங்கள் ஒவ்வொரு “Test” லிங்க் கிளிக் செய்யும் இதே பக்கத்தில் “Result” பார்ப்பதற்கான லிங்க் கொடுக்கப்பட்டிருக்கும் அதனை கிளிக் செய்தும் Result பார்த்துக் கொள்ளலாம்.