12Th Tamil Unit 1 Book Back Answers
12Th Tamil unit 1 Book Back Answers For Tamil Nadu New Syllabus Samacheer kalvi Text Book
12 Th Tamil Unit 1 Text Book One Mark Question And Answer
- பிழையான தொடரைக் கண்டறிக.
(அ) காளைகளைப் பூட்டி வயலை உழுதனர் (ஆ) மலை மீது ஏறிக் கல்வெட்டுகளைக் கண்டறிந்தனர்.
(இ) காளையில் பூத்த மல்லிகை மனம் வீசியது. (ஈ) நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின.
விடை (இ) காளையில் பூத்த மல்லிகை மனம் வீசியது.
2.பேச்சுத் தமிழில் அமைந்த தொடரைத் தேர்க.
(அ) அவருக்கு நல்லது கெட்டது நல்லாத் தெரியும். (ஆ) புத்தகக் கண்காட்சி நடைபெறுகின்றது
(இ) வறட்சி எல்லா இடங்களையும் பாதித்துள்ளது. (ஈ) மயில்கள் விறலியரைப் போல் ஆடுகின்றன.
விடை (அ) அவருக்கு நல்லது கெட்டது நல்லாத் தெரியும்
3.இலக்கியத்தையும் மொழியையும் ஒருசேரப் பேசுகின்ற இலக்கண நூல்…….
அ) யாப்பருங்கலக்காரிகை ஆ) தண்டியலங்காரம் இ) தொல்காப்பியம் ஈ) நன்னூல்
விடை : (இ) தொல்காப்பியம்
4.”மீண்டுமந்தப் பழமைநலம் புதுக்கு தற்கு…” – கவிஞர் குறிப்பிடும் பழமைநலம்…..
(க) பாண்டியரின் சங்கத்தில் கொலுவிருந்தது. (உ) பொதிகையில் தோன்றியது. (ங) வள்ளல்களைத் தந்தது
அ) க மட்டும் சரி ஆ) ௧, ௨ இரண்டும் சரி
இ) ௩ மட்டும் சரி ஈ) ௧, ௩ இரண்டும் சர
விடை : (ஈ) க,ங இரண்டும் சரி (பாண்டியரின் சங்கத்தில் கொலுவிருந்தது & வள்ளல்களைத் தந்தது.
5. “ மின்னேர் தனியாழி வெங்கதிரொன்று ஏனையது தன்னேர் இலாத தமிழ்…!” – இவ் அடிகளில் பயின்று வந்துள்ள தொடைநயம்..
அ) அடிமோனை, அடிஎதுகை ஆ) சீர்மோனை, சீர்எதுகை இ) அடிஎதுகை, சீர்மோனை ஈ) சீர்எதுகை, அடிமோனை
விடை (இ) அடி எதுகை, சீர் மோனை
6. கருத்து 1 : இயல்பு வழக்கில், தொடரைமைப்பு என்பது எழுவாய், பயனிலை என்று வருவதே மரபு.
கருத்து 2 : தொடரமைப்பு, சங்கப் பாடல்கள் பலவற்றில் பிறழ்ந்து வருகின்றது.
அ) கருத்து 1 சரி ஆ) கருத்து 2 சரி இ) இரண்டு கருத்தும் சரி ஈ) கருத்து 1 சரி, 2 தவறு
விடை : (இ) இரண்டு கருத்துகளும் சரி
- பொருத்துக.
அ) தமிழ் அழகியல் – 1) பரலி சு. நெல்லையப்பர்
ஆ) நிலவுப்பூ – 2) தி.சு. நடராசன்
இ) கிடை – 3) சிற்பி பாலசுப்பிரமணியம்
ஈ) உய்யும் வழி – 4) கி. ராஜநாராயணன்
அ) 4, 3, 2, 1 ஆ) 1, 4, 2, 3 இ) 2, 4, 1, 3 ஈ) 2, 3, 4, 1
விடை : 2,3,4,1
(அ) தமிழ் அழகியல் ….…. (2) தி.சு. நடராசன்
(ஆ)நிலவுப்பூ ….. (3) சிற்பி பாலசுப்பிரமணியம்
(இ)கிடை …. (4) கி. ராஜநாராயணன்
(ஈ)உய்யும் வழி … (1) பரலி சு . நெல்லையப்பர்
விரைவுக் குறியீடு ( QR CODE ) ஒரு மதிப்பெண் வினாக்கள்
1. ”இளந்தமிழே…!” எனும் தலைப்பில் அமைந்த மொழிவாழ்த்துப் பாடல் இடம்பெற்ற நூல்……. விடை : நிலவுப் பூ
2 வேறுபாடான ஒன்றைத் தேர்வு செய்க!
(அ) ஒளிப்பறவை (ஆ) அலையும் சுவடும் (இ) சர்ப்பயாகம் (ஈ) சூரியநிழல்
விடை (ஆ) அலையும் சுவடும்
( விடைக்கான காரணம் : ) ஒளிப்பறவை , சர்ப்பயாகம், சூரியநிழல் ஆகிய மூன்று நூல்களையும் சிற்பி பாலசுப்பிரமணியம் எழுதியுள்ளார். “அலையும் சுவடும்” எனும் நூலைச் சிற்பி பாலசுப்பிரமணியம் எழுதவில்லை)
3.இலக்கியத்தின் நோக்கம் குறித்துத் தெளிவாகச் சுட்டிக்காட்டும் இலக்கண நூல் ____________ விடை : தொல்காப்பியம்
4.ஓசையும் பொருளும் இணைந்து கலை வடிவம் கொள்கின்றன. இதனையே ____________ என்கின்றோம். விடை : ஒலிப் பின்னல
5.” யாமும் பாரியும் வளமே” – அடிக்கோடிட்ட யாமும் எனும் சொல் யாரைக் குறிக்கின்றது.? விடை : -கபிலர்
6.“ தொடியுடைய தோள் மணந்தனன் “ – எனத் தொடங்கும் பாடல் இடம்பெற்றுள்ள நூல் _____________ விடை : புறநானூறு
7.அணியிலக்கணத்தைப் பற்றி மட்டுமே பேசும் நூல்_______________ விடை : தண்டியலங்காரம்
8.‘பாரதி கடிதங்கள்’ எனும் நூலைப் பதிப்பித்தவர்____________
விடை: ரா. அ. பத்மநாபன்
9.எட்டையபுரம் மன்னர்களின் பரம்பரை வரலாறு பற்றிக் கவிகேசரி சாமி தீட்சிதர் எழுதிய நூல் __________ விடை : வம்சமணி தீபிகை
10.”ஈறு போதல்..” – என்ற ஒரு விதியில் மட்டும் புணரும் பண்புத் தொகைச் சொல்……..
(அ) செம்பரிதி (ஆ) செந்நிறம் (இ) செந்தமிழ் (ஈ) வெங்கதிர்
விடை: (அ) செம்பரிதி