Trust Exam Question Paper And Study Material

TRUST Exam – Tamil Nadu Rural Students Talent Search Examination

தமிழ்நாடு ஊக மாணவர்கள்‌ திறனறித்‌ தேர்வு

Trust Exam Study Material

Trust Exam எழுதுவதற்கான தகுதிகள் :

1. 8ஆம்‌ வகுப்பு முழு ஆண்டுத்‌ தேர்வில்‌ 50 சதவீதம்‌ பெற்று தற்போது 9 ஆம்‌ வகுப்பு பயின்று வரும்‌ மாணவ / மாணவியர்கள்‌ இத்தேர்வினை எழுதலாம்‌.

2. மாணவ / மாணவியர்‌ குடியிருப்புப்‌ பகுதியும்‌. அவர்கள்‌ பயிலும்‌ பள்ளியும்‌ ஊரகப்‌ பகுதியில்‌ அமைந்திருக்க வேண்டும்‌. ஊரகப் பகுதியில் அதாவது கிராமப்புற பஞ்சாயத்து மற்றும் டவுன்சிப் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில்  9-ம் வகுப்பு பயிலும் மாணவ / மாணவியர்கள் இத்திறனாய்வு தேர்வு எழுதுவதற்கு தகுதி படைத்தவராவார்கள்.

3. நகராட்சி மற்றும்‌ மாநகராட்சி பகுதிகளில்‌ பயிலும்‌ மாணவ / மாணவியர்கள்‌ இத்தேர்வில்‌ கலந்து கொள்ள இயலாது.

4. மாணவ/மாணவியரின்‌ பெற்றோர்‌ வருமானம்‌ ரூ.1,00,000க்கு (ரூபாய் ஒரு இலட்சத்திற்கு) மிகாமல்‌ இருக்க வேண்டும்‌.

தேர்விற்கு விண்ணப்பிக்கும் முறை

1.பொதுவாக ஜுன் – ஜுலை மாதத்தில் தேர்வு பற்றிய அறிவிப்பு வெளிவரும்.

2.www.dge.tn.gov.in என்ற இணையத் தள முகவரியில் வெளியிடப்படும் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து அவற்றில் கூறப்பட்டுள்ள நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

3.தற்போது தேர்வுக் கட்டணம் ரூ. 10 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்தேர்வினைப் பொறுத்தவரை விண்ணப்பத்துடன் வருமானச் சான்றிதழை இணைத்து அனுப்ப வேண்டி இருப்பதால், மாணவ / மாணவியர் முன்னரே அச்சான்றிதழை பெற்று கைவசம் வைத்திருப்பது மிக அவசியம்.

4.மேலும் அரசால் அந்தந்த வருடத்தில் வெளியிடப்படும் புதிய நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்

தேர்விற்கான பாடத்திட்டம் :

  • இத்தேர்வில் எட்டாம் வகுப்பில் மூன்று பருவங்களில் இருந்து கணிதம்.அறிவியல். சமூக அறிவியல் பாடப்பகுதி. மனத்திறன் பகுதிகளில். வினாக்கள் கேட்கப்படும்.
    • மதிப்பெண் பங்கீடு :
      • கணிதம் : 25
      • அறிவியல் : 25
      • சமூக அறிவியல் : 25
      • மனத் திறன் பகுதி : 25
        • மொத்தம் : 100

பாடப் பகுதி பாங்கீடு தோராயமாக :

பாடம்பிரிவுமதிப்பெண்
கணிதம்கணிதம் 25
அறிவியல்இயற்பியல்6
வேதியியல்7
தாவரவியல்6
விலங்கியல்6
சமூக அறிவியல்வரலாறு 10
குடிமையியல்5
புவியியல் 10
மனத்திறன்எண் தொடரில் விடுபட்ட எண்ணை நீரப்புதல்5
எண்/ எழுத்து குறியிடல்5
படம் மற்றும் எண் தொடர்பு5
தனித்த/ வேறுபட்ட எழுத்து / வார்த்தைகள் கண்டறிதல்5
தனித்த / வேறுபட்ட படம் கண்டறிதல்5
  • இத்தேர்வில் 10௦ வினாக்கள் கேட்கப்படும். ஒவ்வொரு சரியான விடைக்கும் தலா 1 மதிப்பெண் அளிக்கப்படும்.
  • அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க வேண்டும்.
  • தவறான விடைக்கு எதிர் மதிப்பெண் கிடையாது.
  • இத்தேர்விற்கு 150 நிமிடங்கள் ஒதுக்கப்படும்

மாணவ / மாணவியர்கள் தேர்வு செய்யப்படும் வீதம் :

தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களுள் ஒவ்வாரு வருவாய் மாவட்டத்திற்கும் 100 பேர் வீதம் (50 மாணவர்கள் மற்றும் 50 மாணவியர்கள்) தேர்வு செய்யப்படுவர்.

மாணவ / மாணவியர்கள் பெறும் உதவித் தொகை :


தேர்வு செய்யப்பட்ட மாணவ / மாணவியர்களுக்கு ஆண்டொன்றுக்கு ரூ.1000 வீதம் 4 ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.

Trust Exam Question paper And answer key

Question Paper download Link
2017 Exam Question Paper -Tamil Medium Download
2017Exam Question Paper – English Medium Download
2018 Exam Question Paper – Tamil Medium with Answer Key Download
2018 Exam Question Paper – English Medium Download
2019 Exam Question Paper – Tamil Medium Download
2019 Exam Question Paper – English Medium Download
2019 EXAM Tentative Answer Key Both Medium Download
2020-21 Trust Exam DGE Tentative Key Download
2020-21 Trust Model Question Paper Download
2021-22 DGE Trust Original Question Paper Download

Trust Exam Study Material

Model Question Paper

Other Exam

8th standard Level – NMMS EXAM

10Th Standard Level – NTSE EXAM